நெதர்லாந்து நாட்டுடனான தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் ஒன்று இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை தொழில் வர்த்தக சங்கம் (MCCI-Madras Chamber of Commerce and Industries) மற்றும் சென்னையிலுள்ள நெதர்லாந்து வணிக ஆதரவு அலுவலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கருத்தரங்கு கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், விவசாயம், தளவாடம், தண்ணீர், எரிசக்தி, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையே உள்ள தொழில் வர்த்தக வாய்ப்புகள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கருத்தரங்கம் தமிழக அரசு தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர் தலைமையில் நடைபெறவுள்ளது. வர்த்தக சங்கத்தின் தலைவர் பிரபாகரன், நெதர்லாந்து நாட்டு பிரதிநிதிகள் மைக்கேல் பிர்க்கன்ஸ், மைக்கேல் வான் எர்கல், ஸ்டேன்ஸ் கிளிஜ்னன் ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.

English Summary : Business opportunities seminar between India – Netherlands to be conducted in Chennai.