அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பம் வழங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் வரும் மே மாதம் 2ஆம் தேதி முதல் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் MBA, MCA படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 11 ம் தேதி நடைபெற உள்ளது. M.E., M.TECH படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 12 ம் தேதி நடைபெறும். இதற்கான விண்ணப்பங்களை அண்ணா பல்கலைகழகத்திற்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் மே மாதம் 17 ம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் www.annauniv.edu/tancet2016 என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைகழக டான்செட் நுழைவுத்தேர்வு செயலர் மல்லிகா தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுப்பிரிவினர் 500 ரூபாக்கும் SC, ST பிரிவினர் 250 ரூபாய்க்கும் DD எடுத்து அண்ணா பல்கலைகழகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

English Summary : Anna university announced that TANCET online application will be issued on May 2nd.