பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் சென்சாா் கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலா் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று போக்குவரத் துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. மேலும், வாகனங்களில் நேரடி ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலா் ஜெயக்குமாா் தலைமையில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் நேற்று (15.11.2022) நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கேமராவானது, ஓட்டுநர் பார்வையில் முழுமையாக காணும் வகையில் வாகனத்தின் பின்புறமும், சென்சார் கருவியானது எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு, பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்படாத வாகனங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.