சி.பி.எஸ்.இ.12ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று பிற்பகல 12மணிக்கு வெளியானது. சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்த மாணவ மாணவிகளின் முடிவுகள் www.CBSE.nic.in என்ற இணையதளத்தில் ஏற்கனவே அறிவித்தபடி பகல் 12 மணிக்கு மத்திய வாரியம் வெளியிட்டது.
சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் உள்ளிட்ட 8 மாநில பிரதேசங்கள் அடங்கும். தமிழ்நாட்டில் 400 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதிய சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு இந்த ஆண்டு தாமதமாக வெளியாகி உள்ளது.
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக ஏராளமான மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்துவிட்டு மதிப்பெண்களை தெரிந்து கொள்வதற்காக தேர்வு முடிவு இதுநாள் வரை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவு இன்று வெளியானதால் மாணவ– மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தேர்வு முடிவு பற்றிய முழுவவிவரம், மதிப்பெண் சான்றிதழ் போன்றவை அந்தந்த பள்ளிகளுக்கு இன்று மாலைக்குள் சென்று விடும்.
வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சி.பி.எஸ்.இ தேர்வெழுதிய மொத்த மாணவ, மாணவிகளில் 82 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 77.77 சதவீதமும், மாணவிகள் 87.56 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டெல்லி க்ரீன் பீல்டு பள்ளியில் படித்த எம்.காயத்ரி என்ற மாணவி 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதல் மாணவியாக தேர்வு பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து அமிட்டி இண்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த மைதிலி மிஷ்ரா, 495 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
English Summary : Delhi Student M.Gayathri scores first mark in India with total 496 out of 500 in CBSE +2 result 2015.