சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை பெற்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியிட்டவர் பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் சி.கல்யாண் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் உத்தம வில்லன் படத்தை அடுத்து சி.கல்யாண், தெலுங்கு உரிமையை பெற்றுள்ள திரைப்படம் நயன்தாராவின் ‘மாயா’ என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ‘மாயா’ என்றும், தெலுங்கில் ‘மயூரி’ என்றும் ரிலீஸ் ஆகவுள்ள இந்த திகில் மற்றும் மர்மம் கலந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கியுள்ளார். நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஆரி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் லட்சுமி ப்ரியா, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரோன் ஈதான் ரோஹான் என்பவர் இசையமைக்கும் இந்த படத்திற்கு சத்யா ஒளிப்பதிவும், சுரேஷ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

English Summary : Uthama villan and Maaya will be released by the same Telugu ownership.