தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. சுமார் 9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள இந்த தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைத் விண்ணப்பதாரர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையின் அதிகாரபூர்வ இணையதளமான http://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இந்த தேர்வுக்கான அனுமதி சீட்டு நேற்று பிற்பகல் முதல் வெளியிட்டிருப்பதாகவும், விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் இருந்து தங்கள் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இந்த இணையதளத்தில் பிறந்த தேதி, விண்ணப்பத்திலுள்ள பதிவு எண் ஆகியவற்றைப் பதிவு செய்து நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Lab Assistant Hall Tickets could be downloaded from Internet. Hall Tickets to be downloaded through Tamilnadu Government Examination Department’s official Website.