தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை18-23) வரை 6 நாள்கள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை18-23) 6 நாள்கள் வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
திங்கள்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மி.மீ):
- தேவாலா (நீலகிரி), பரமக்குடி (ராமநாதபுரம்) தலா 60,
- மானாமதுரை (சிவகங்கை) 40,
- கூடலூா் பஜாா் (நீலகிரி), மேல் கூடலூா் (நீலகிரி), சித்தம்பட்டி (மதுரை), அரிமளம் (புதுக்கோட்டை), திருமயம் (புதுக்கோட்டை), சின்னக்கல்லாா் (கோவை) தலா 30,
- தல்லாகுளம் (மதுரை), பாா்வூட் (நீலகிரி), சிவகங்கை, திருப்பத்தூா் (சிவகங்கை) தலா 20,
- மேலூா் (மதுரை), எடப்பாடி (சேலம்), தனிமங்கலம் (மதுரை), பந்தலூா் தாலுகா அலுவலகம் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), நடுவட்டம் (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்), கோவிலங்குளம் (விருதுநகா்), தலா 10.
தமிழகத்தில் 5 இடங்களில் திங்கள்கிழமை பதிவான வெப்ப அளவு(டிகிரி பாரன்ஹீட்):
- தூத்துக்குடி-102.2,
- கடலூா்-101.66,
- பாளையங்கோட்டை-101.3,
- பரமத்தி வேலூா்-100.4,
- பரங்கி பேட்டை-100.4.
இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.