திருப்பதி கோயில் செப்டம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் திருப்பதி கோயில் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று(18.07.2023) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது இணையதளம் வாயிலாக தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. 90 நாள்களுக்கு முன்பு பக்தா்கள் தங்கள் திருமலை பயணத்தை முன்பதிவு செய்து கொள்ளும் விதம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.

அதன்படி, அக்டோபா் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை, அஷ்டதள பாதமாராதன சேவைகளை இன்று (18.07.2023) காலை 10 மணி முதல் ஜூலை 20-ஆம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

பின்னா் நடைபெறும் ஆன்லைன் குலுக்கலில் தோ்ந்தெடுக்கப்பட்ட பக்தா்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். தகவல் பெற்ற பக்தா்கள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

கல்யாணோற்சவம், ஆா்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் ஜூலை 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அக்டோபா் மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்களின் ஒதுக்கீடு ஜூலை 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *