சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அசாம் மாநிலத்தின் காமக்யா என்ற நகருக்கு சிறப்பு ரயில் ஒன்றை இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது:

ரயில் எண் 06062 என்ற சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 20ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5.20 மணிக்குப் புறப்பட்டு, ஜூன் 22ஆம் தேதி (திங்கள்கிழமை) 11.25 மணிக்கு அசாம் மாநிலம் காமக்யா ரயில் நிலையத்தைச் சென்று அடையும்.

இந்தச் சிறப்பு ரயிலில் படுக்கை வசதிக் கொண்ட 2ஆம் வகுப்பு பெட்டிகள் 6, பொதுப் பெட்டிகள் 6, சரக்குப் பெட்டிகள் 2 ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். நெல்லூர், ஓங்கோல், ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், குர்தா சாலை, புவனேஸ்வரம், காரக்பூர், ஹெளரா, மால்டா டவுண், நியூ ஜல்பைகுரி போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கும்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Train No. 06062, Chennai – Assam Kamakhya special train will function from June 20.