central-18216
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து போகும் ஒரு முனையமாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் நிலையத்தை ரயில், பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் என பன்முக போக்குவரத்து முனையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைபன்முக போக்குவரத்து முனையமாக்க, சிஎம்டிஏ சார்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ.389 கோடியே 42 லட்சம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகளுக்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு இதுவரை தமிழக அரசு சார்பில் ரூ.3 ஆயிரத்து 907 கோடியும், மத்திய அரசு சார்பில் ரூ.2 ஆயிரத்து 307 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜப்பான் நாட்டின் பன்னாட்டு கூட்டுறவு முகமையும் ரூ.7 ஆயிரத்து 8 கோடியை கடனாக வழங்கியுள்ளது.

ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் என பல்வேறு போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைத்து பன்முகப் போக்குவரத்து முனையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை உருவாக்க ரூ.389 கோடி நிதியை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,032 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
English summary-Chennai central to become more popular