தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளில் இப்போதைய நிலையில் நான்கு தொகுதிகள் விஐபிக்களின் தொகுதியாக மாறியுள்ளது. இன்னும் முக்கிய அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டால் இன்னும் ஒருசில தொகுதிகள் விஐபி தொகுதிகளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் அமைச்சர் வளர்மதி ஆயிரம் விளக்கு தொகுதியிலும், கோகுல இந்திரா அண்ணா நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதேபோல் சென்னை எழும்பூர் தொகுதியில் பரிதி இளம்வழுதியும் மைலாப்பூரில் முன்னாள் காவல்துறை அதிகாரி கே.நட்ராஜ் அவர்களும் போட்டியிடுகின்றனர். ஆர்.கே. நகர், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், எழும்பூர் ஆகிய சென்னை தொகுதிகள் விஐபி தொகுதிகளாக மாறியுள்ள நிலையில் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் மற்றும் துறைமுகம், சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் திமுகவின் முன்னணி தலைவர்கள் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English summary : Chennai district seats VIP seat.