கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லும் ரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு பல சிறப்பு ரயில்களை இயக்கிய தெற்கு ரயில்வே தற்போது கோடை விடுமுறை முடிய உள்ளதை அடுத்து திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் வரையிலான சிறப்பு ரயில் ஒன்றை நேற்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது: ரயில் எண் 06042 என்ற ரயில் வரும் ஜூன் 6-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இதே போல் மறுமார்க்கத்தில் ரயில் எண் 06044 என்ற ரயில் வரும் ஜூன் 6-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும், பயணிகள் இந்த சிறப்பு ரயிலை தங்கள் பயணத்திற்கு பயன்படுத்தி கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Chennai Egmore to Thirunelveli Special Trains Announced by Southern Railway.