சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக கடந்த ஞாயிறு அன்று ஒரே நாளில் ஆந்திராவில் இருந்து 8 பெட்டிகள் கொண்ட இரண்டு ரயில்கள் வந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஆந்திராவில் இருந்து லாரிகள் மூலம் 8 பெட்டிகளுடன் கூடிய இரண்டு ரயில்கள் சென்னை கோயம்பேடுக்கு கொண்டு வரப்பட்டது.
ஏற்கனவே மெட்ரோ ரயில் சேவைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 19 மெட்ரொ ரயில்கள் சென்னைக்கு வந்துள்ள நிலையில் நேற்று மேலும் 2 ரயில்கள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் நாட்டின் ரயில் நிறுவனம் ஒன்று ஆந்திரவில் உள்ள ஸ்ரீசிட்டியில் தனது கிளையை நிறுவி ரயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது. இதுவரை சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக 64 பெட்டிகள் கொண்ட 21 ரயில்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், மேலும் 12 ரயில்கள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary : Chennai Metro train adds additional of 2 trains each consists of 8 boxes on Sunday.