தமிழ்நாட்டில், இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 375 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிர் இழந்துள்ளனர். காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையில் பொது சுகாதாரத்துறையும், சென்னை மாநகராட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பன்றி காய்ச்சலுக்கான அறிகுறி உள்ளவர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்து, ‘பாசிட்டிவ்’ என முடிவு தெரிந்தால் காய்ச்சலுக்கு உண்டான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழக அரசு பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்ய 7 ஆய்வு கூடங்களும், தனியார் மருத்துவத்துறை சார்பில் 13 ஆய்வு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஆய்வகங்களில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் ஆய்வகங்களில் ரூ.3,750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தனியார் ஆய்வு கூடங்களில் இந்த கட்டணத்திற்கு அதிகமாக வசூலித்தால் அந்த நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary: Private Laboratories are instructed to not collect the Fees of Rs.3,750 to Swine Flu. If any labs are collecting more that fees, they will be a severe action taken, by Health Department Officers.