சென்னை, ஜூன் 6: தி சென்னை சில்க்ஸ், தென்னிந்தியாவின் தலைசிறந்த சில்லறை வர்த்தக நிறுவனமாகும். தி. நகரின் மிக முக்கியமான ஸ்தாபனமான இது, தனது இணையற்ற வாடிக்கையாளர் சேவையில் மேலும் ஒரு அங்கமாக தற்போது “அட்சயம் ஃபுட் பாக்ஸ்” மூலமாக சூடான, தூய்மையான சைவ உணவை அனைவருக்கும் வழங்கவுள்ளது. சில்லறைவணிக நிறுவனங்களிலேயே சென்னையில் முதன்முறையாக இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தென்கிழக்காசியாவில் மிகப்பெரும் வணிக இடமும் நாட்டிலேயே மிக பரபரப்பான வணிக வளாகமுமானது தி.நகர். இங்கு வருடத்திற்கு சுமார் 20,000 கோடிரூபாய்க்கு வியாபாரம் நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஜவுளி, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை சாமான்கள் மற்றும் இன்னும் பல பொருட்கள் இங்கு விற்கப்படுகின்றன. குறைவான விலையில் நிறைவாக பொருட்களை வாங்க இளைஞர், முதியோர், ஏழை, பணக்காரர் என அனைவரும் இங்கு வருகின்றனர் என்றால் அது மிகையில்லை.

திரு. பி.ஏ. ரவீந்திரன். பொது மேலாளர், தி சென்னை சில்க்ஸ், தி நகர், கூறியதாவது: “எப்போதும் புதுமைகளை நிகழ்த்தி எங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியூட்டவே நாங்கள் விரும்புகிறோம். தினமும் தி சென்னை சில்க்ஸுக்கு 2000 வாடிக்கையாளர்கள் வருகிறார்கள், இவ்வெண்ணிக்கை விழாக்காலங்களில் மட்டும் 20.000 ஆகும்! எனவே, ஏதாவதொரு புதுமையை எப்போதும் நிகழ்த்துவதை எங்களது முக்கிய குறிக்கோளாகக்கொண்டுள்ளோம். இவ்வகையில் சில மாதங்களுக்கு முன் க்ளாஸ் பார்க்கிங் முறையை அறிமுகம் செய்தோம். தர்போது எங்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தானியங்கி உணவு ஏ.டி.எம் ஐ நிறுவியிருக்கிறோம்.

தி சென்னை சில்க்ஸில் உள்ள ஃபுட் பாக்ஸ் எனப்படும் இத்தானியங்கி எந்திரத்தின் மூலம் சூடான, புதிய மற்றும் தூய்மையான சைவ உணவை உண்டு மகிழலாம். அடையார் ஆனந்த பவன், அஞ்சப்பர், சார்மினார், மோதி மஹால் மற்றும் சுதா உடுப்பி போன்ற சென்னையின் மிக பிரபலமான உணவகங்கள் இவ்வுணவை வழங்குகின்றன.

இவ்வியந்திரம் நவீன தொழிட்நுட்பத்தால் வடிவைமைக்கப்பட்டுள்ளது. எனவே உணவின் தூய்மை பாதுகாக்கப்பட்டு எந்திரத்திலிருந்து சுடச்சுட வெளிவரும். இரண்டே நிமிடங்களில் உணவு கிடைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. விலையும் மிக நியாயமானது.

சப்பாத்தி மற்றும் காய்கறிகள், ஃப்ரைட் ரைஸ் மற்றும் கோபி மஞ்சூரியன் என பலவிதமான உணவு வகைகள் ரூ.80 முதல் ரூ.120 வரை இங்கு கிடைக்கும். இச்சேவை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: திரு. பி.ஏ. ரவீந்திரன், ஜி.எம், சென்னை சில்க்ஸ், 99400 21286, திரு. சத்யன் பட், எம்.டி., ப்ரிசம் பி. ஆர். , 98400 85411.