பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாகுபாலி’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் டிரைலர் ரிலீசாகி வெறும் 40 மணி நேரத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை புரிந்துள்ள நேரத்தில் திடீரென இந்த படத்தின் டிரைலர் யூடியூப் இணையதளம் நீக்கிவிட்டது. இதனால் படக்குழுவினர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய திரையுலகில் மாபெரும் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தின் டிரைலரை நீக்கியதற்கான சரியான காரணத்தை யூடியூப் இணையதளம் அறிவிக்கவில்லை. இருப்பினும் அந்த இணையதளத்தின் ஒருசில விதிமுறைகளை இந்த படத்தின் டிரைலர் வீடியோ மீறியுள்ளதாக யூடியூப் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் “நம்பர் 1 நெனோக்கடின்’ என்ற திரைப்படத்தின் டிரைலரையும் யூடியூப் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Bahubali trailer removed from youtube by youtube due to some violated restrictions.