தற்போது நடைபெற்று வரும் வேளாங்கன்னி திருவிழாவுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டுள்ளனர். வட மாநிலங்களில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் சென்னை வந்து அதன் பின்னர் வேளாங்கன்னி செல்வதால் சென்னையில் இருந்து வேளாங்கன்னி செல்லும் ரெயில்களில் கூட்ட நெரிசல் அதிகம் உள்ளது. இந்நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திக்குறிப்பில் உள்ள சிறப்பு ரெயில்களின் விவரம் பின்வருமாறு:-

1. சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 7-ந்தேதி இரவு 10.45 மணிக்கு வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் வ.எண்:06071 என்ற சிறப்பு ரெயில் அடுத்த நாள் காலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

2. வேளாங்கண்ணி- சென்னை எழும்பூர் இடையே ‘சுவிதா’ சிறப்பு ரெயில்(00616) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 8-ந்தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

3. வேளாங்கண்ணியில் இருந்து லோக்மான்யா திலக் டெர்மினஸ் செல்லும் ‘சுவிதா’ சிறப்பு ரெயில்(00613), 9-ந்தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 12.15 மணிக்கு லோக்மான்யா திலக் டெர்மினஸை சென்றடையும்.

4. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செப்டம்பர் 4-ந்தேதி இரவு 10.30 மணிக்கு எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும் ‘சுவிதா’ சிறப்பு ரெயில்(00605), மறுநாள் காலை 11.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

5. எர்ணாகுளத்தில் இருந்து செப்டம்பர் 6 மற்றும் 20-ந்தேதிகளில் இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படும் ‘சுவிதா’ சிறப்பு ரெயில்(00606), அடுத்தநாள் காலை 8.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

6. திருவனந்தபுரத்தில் இருந்து செப்டம்பர் 17 மற்றும் 24-ந்தேதிகளில் இரவு 7 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு இயக்கப்படும் ‘சூப்பர் பாஸ்ட்’ சிறப்பு ரெயில்(06075), மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

7. மறுமார்க்கமாக சென்னை சென்டிரலில் இருந்து செப்டம்பர் 17 மற்றும் 24-ந்தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் ‘சூப்பர் பாஸ்ட்’ சிறப்பு ரெயில்(06076), அடுத்த நாள் காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

மேலும் வேளாங்கன்னியில் இருந்து கேரளா மாநிலம் திவிம்க்கு இன்று காலை 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் நாளை பகல் 1.30 மணிக்கு திவிம் சென்றடைகிறது. இந்த ரெயில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஷோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், காசரகாட், மங்களூர், உடுப்பி, உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரெயில்கள் அனைத்துக்கும் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இந்த சிறப்பு ரெயில்களை வேளாங்கன்னி திருவிழாவுக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Booking starts today for Chennai-Velankanni special train.