சென்னை அருகே உள்ள மீஞ்சூர் பகுதியில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று ஒருநாள் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு இன்று குடிநீர் சப்ளை செய்யப்படாது என்றும் எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதவது:
சென்னை அருகே மீஞ்சூரில் அமைந்துள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூன் 1) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், படேல் நகர், வியாசர்பாடி ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை குடிநீர் குறைவாக விநியோகிக்கப்படும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதுகுறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் இப்பகுதி பொதுமக்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
பகுதி பொறியாளர் 1- 81449 30901
பகுதி பொறியாளர் 2- 81449 30902
பகுதி பொறியாளர் 3- 81449 30903
பகுதி பொறியாளர் 4- 81449 30904
செயற்பொறியாளர், மண்டலம் 2- 81449 30400
தலைமை அலுவலகம் (புகார் பிரிவு)- 044- 2845 4040, 4567 4567.
English Summary : Chennai Water Board planned to close Desalination plant for maintenance work on Monday 6am- 6pm. So people from Minjur region are asked to use their water supply wisely.