சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்து, அரசு விதிகளின்படி நிபந்தனைகளை திருத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் பெரியமேடு பகுதியில் மை லேடி பூங்காவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க, பல்வேறு நிபந்தனைகளை விதித்து, ஒப்பந்ததாரரிடம் வழங்கியுள்ளது.
சிறுவன் உயிரிழப்பு:
அண்மையில் இந்த நீச்சல் குளத்தில், பயிற்சியாளர்கள் கவனக்குறைவால் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி (நீச்சல் குளம் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல்) விதிகளில் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நீச்சல் குளத்தில் குளிக்க தடை விதித்து இருந்தது.