கடந்த வாரம் கார்த்தி நடித்த ‘கொம்பன், உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேண்டா, விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் சகாப்தம் ஆகிய மூன்று தமிழ் படங்கள் ரிலீஸாகி தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றில் கொம்பன் மற்றும் நண்பேண்டா ஆகிய படங்கள் நல்ல வசூலை தந்து கொண்டிருந்த போதிலும், இந்த படங்களின் வசூல்களை மிஞ்சிய வகையில் ஹாலிவுட் திரைப்படமான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7’ படத்தின் வசூல் இருப்பதாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7″ திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.32.75 கோடி வசூல் செய்து இந்திய மொழி படங்களுக்கு சவால் விடும் வகையில் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் அதிகளவிலான தியேட்டர்களில் இந்தியாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
“ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்” படத்தின் நாயகன் பால் வாக்கர் சமீபத்தில் கார் விபத்து ஒன்றில் அகால மரணம் அடைந்தது அனைவரும் அறிந்ததே. அவருடைய கடைசி படம் இது என்பதால் அவருடைய ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க பெரும் ஆர்வம் காட்டினார்கள் என்பதும் இந்த மாபெரும் வசூலுக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஊடகங்களும், பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருப்பதால், விரைவில் இந்த படம் ரூ.100 கோடி வசூலை இந்தியாவில் எட்டிப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary : “Fast and Furious 7” collects 32.75 crores in 2 days in India, and expects to cross more than 100 crores in few days.