சென்னையைச் சேர்ந்த பிரபல சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் அ.பன்னீர்செல்வம் அவர்கள் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வில் சிறந்து விளங்குவதற்காக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

“டயபட்டீஸ் இந்தியா 2015′ என்ற அமைப்பு இந்தியா முழுவதிலும் இருந்தும் முதன்முறையாக சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறந்து விளங்கும் 25 நிபுணர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருது அளிக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவு செய்தது.

இதன் அடிப்படையில் சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறந்து விளங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலில் சென்னையை சேர்ந்த டாக்டர் அ.பன்னீர்செல்வம் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் பிற மாநிலங்களைச் சேர்ந்த 24 சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்களும் இவருடன் இணைந்து விருது பெற உள்ளனர்.

சென்னையில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை உலக சர்க்கரை நோய் மருத்துவ மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் வரும் 10-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் டாக்டர் அ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 25 சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்களுக்கு விருது அளிக்கப்படவுள்ளது.

English Summary : “Diabetes India 2015” awareness was conducted throughout India. Dr.A.Paneer Selvam was selected for Diabetes Awareness Award.