ஏழை, எளிய பட்டதாரி இளைஞர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் கலந்து கொள்ளும் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி கொடுக்க சென்னை மாநாகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஏழை, எளிய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகரில் படித்த ஏழை, எளிய பட்டதாரி இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சிகளை சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது.
இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மத்திய அரசு தேர்வாணைய (யுபிஎஸ்சி) குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி சென்னை செனாய் நகர் அம்மா அரங்கில் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி சென்னை சைதாப்ட்டையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மையங்களிலேயே வழங்கப்படுகின்றன. விருப்பமுள்ள ஏழை பட்டதாரி மாணவர்கள் இந்த விண்ணப்பத்தை நேரில் பெற்று விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
English Summary:Competitive Exam Training For Poor Graduate:Chennai Corporation Organized.