coastal cleanஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் 3-வது சனிக்கிழமை சர்வதேச கடலோர தூய்மை தினம் (International coastal cleanup day) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுவதுண்டு. இந்த நாளில் உலகில் உள்ள சமூகநல ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் கடலோர பகுதிகளை சுத்தம் செய்வதுண்டு. இந்நிலையில் இந்த வருட சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை கடலோர காவல் படையினர் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட 3 ஆயிரம் பேர் இணைந்து நேற்று சுத்தப்படுத்தினர்.

கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு இந்தியக் கடலோர காவல் படை சார்பில் சென்னை மெரினா கடற்கரையை தூய்மைப் படுத்தும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடந்தது. இதை சென்னை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். கடலோர காவல் படையின் கிழக்குப் பிராந்திய ஐ.ஜி.யான எஸ்.பி.சர்மா தலைமை வகித்தார்.

கடலோர காவல் படை வீரர்களும், அவர்களது குடும்பத்தினர், மாணவர்கள், தன்னார்வத் தொண் டர்கள் உட்பட 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டு மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், ‘‘உலகிலேயே 2-வது மிகப்பெரிய கடற்கரை என்ற பெயர் பெற்றது சென்னை மெரினா. இதை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இதன் மூலம், சென்னை மக்கள் மற்றும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் கடல் அழகைக் கண்டு ரசிக்க முடியும்’’ என்று கூறினர்.

English Summary:International Coastal Clean up Day Students Clean Marina Beach.