கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர் பணியாளர்களை தேர்வு செய்ய கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டிலும் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோர் குறித்த விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மாநில ஆள் சேர்ப்பு நிலையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் விவரங்கள் ஆகியவை அனைத்தும் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் அதிகாரபூர்வமான இணையதமான www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான எழுத்து மூல உத்தரவுகளும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள், விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கும் என மாநில ஆள் சேர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

English Summary : 3,589 Empty Space in Corporation society selection exam is conducted on 2012 December, selectors list is now released in internet.