இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் கட்டுமான தொழிலை செய்து வரும் முன்னணி நிறுவனமான எல்&டி என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் இந்திய அரசின் பாதுகாப்பு துறையிடம் இருந்து ரூ.1,432 கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு விளங்கும் எல்&டி நிறுவனம் இந்திய கடலோரக் காவல் படைக்கு, 7 நீண்ட தொலைவு ரோந்துக் கப்பல்களைக் கட்டுவதற்காக ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப, நீண்ட தொலைவு ரோந்துக் கப்பல் தயாரிப்பை 100 சதவீத உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளவுள்ளதாகவும், இதற்காக நிறுவனத்தின் போர்க் கப்பல் வடிவமைப்பு மையத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary : Government of India has received A total of Rs .1,432 crore contract to L & T corporation.