முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று சென்னையில் தொடங்கியது. அரசு மருத்துவக் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட இந்த கலந்தாய்வில் முதல்நாளில் மாற்றுத்திறனாளிகள் 14 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில் 2016-2018-ஆம் கல்வியாண்டுக்கான மாநில அரசு ஒதுக்கீட்டான 854 இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரர் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நேற்ற்ய் தொடங்கியது. நேற்றைய முதல்நாளில் 18 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 14 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
மீதம் உள்ள 840 இடங்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரையும், மற்றும் 11, 12 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வு குறித்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
English summary : Counseling for PG medical courses began yesterday in Chennai