பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவர்களில் பெரும்பாலானோர் அடுத்த என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துக்கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாணவர்கள் மேல்படிப்பு குறித்து குழப்பத்தில் உள்ளனர். இதுபோன்ற மாணவர்களுக்கு இலவச கல்வி ஆலோசனை முகாம் ஒன்றை சென்னையில் வரும் 13ஆம் தேதி சனிக்கிழமை சங்கர நேத்ராலயா அகாதெமி நடத்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து சங்கர நேத்ராலயா அகாதெமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான இலவச கல்வி ஆலோசனை முகாம் அம்பத்தூர் மௌனசாமி மடம் தெருவில் உள்ள அபிராமி சிற்றரங்கில் சனிக்கிழமை (ஜூன் 13) காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் சுகாதாரம் சார்ந்த அறிவியல் பிரிவுகளில் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் குறித்து அனுபவம் வாய்ந்த கல்வி ஆலோசகர்கள் விளக்கமளிக்கவுள்ளனர். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 94440 33082 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தகுந்த ஆலோசனைகளை பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
English Summary : Counselling camp for students who just passed +2 will be conducted in Chennai Sankara Netralaya Academy on 13th of this month.