ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று ஊடகங்களை குறிப்பிடுவதுண்டு. ஆனால் அந்த ஊடகங்களுக்கு முழுமையான அளவில் சுதந்திரம் இருக்கின்றதா என்பது குறித்ஹ்டு பின்லாந்து நாட்டின் Reporters Without Borders (RSF) என்ற அமைப்பு கடந்த 2002ஆம் ஆண்டு முதல் கருத்துக்கணிப்பை ஒன்றை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஊடக சுதந்திரம் குறித்த கருத்துக்கணிப்பின் முடிவை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி பின்லாந்து நாடு ஊடக சுதந்திரம் விஷயத்தில் உலகிலேயே முதல் நாடாக உள்ளது. மேலும் இந்நாடு தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் நெதர்லாந்து நாடும், மூன்றாவது இடத்தில் நார்வே நாடும் உள்ளது.
இந்தியா ஊடக சுதந்திரம் விஷயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. மொத்தம் 180 நாடுகளில் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு இந்த பட்டியலில் 133வது இடமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 136வது இடத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஊடகவியலாளர்கள், மற்றும் வலைத்தள பதிவாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், காஷ்மீர் போன்ற சில பகுதிகளில் ஊடகங்களால் சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பிடித்த சில முக்கிய நாடுகள்:
அமெரிக்கா : 44
சீனா: 176
ரஷ்யா – 148
பூட்டான்: 94
பாகிஸ்தான்: 147
நேபாளம்: 105
வங்காளதேசம்: 144
ஆப்கானிஸ்தான்: 120
இந்த பட்டியலில் மிகவும், பின்தங்கிய நாடுகள் வரிசையில் சிரியாவிற்கு 177வது இடமும், வட கொரியா 179வது இடமும், கடைசி இடத்தை எரிட்ரியாவும் (Eritrea) பிடித்துள்ளன.
English Summary : A study of which Country gives more media freedom.