நாடு முழுவதும் ஊரடங்கு மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான வழி என்பதால் உலகமே அதைப் புகழ்ந்துள்ளது. ஆனால் இதற்குப் பிறகும் நிரந்தரமாக ஊரடங்கை வைத்திருக்க முடியாது. பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்க இந்த தளர்வு தேவைப்பட்டது. நாங்கள் உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம், அதே நேரத்தில் பொருளாதார நடவடிக்கைகளையும் தொடங்க வேண்டும். அதற்காக பொருளாதார நடவடிக்கைகளை பிரதமர் மோடி ஓரளவுதளர்த்தியுள்ளார்.
இன்று ஏப்.,20 முதல் தொடங்கும் தளர்வுகள் முதன்மையாக கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டவை என்றாலும், கொரோனா வைரஸ் சூழ்நிலைகள் சிறப்பாக மாறிவந்தால் மேலும் தளர்வு அதிகரித்து நகரங்களிலும் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கும் என்ற நம்பிக்கையுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.