இந்தியாவில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இந்திய குடிமகன் என்கிற அடையாள அட்டையாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. இந்த வகையில், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கட்டாயமாக ஆதார் ஆவணங்களை புதுப்பிக்கும்படி பரிந்துரை செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஜூன் 11ஆம் தேதி வரைக்கும் இலவசமாக ஆதார் கார்டு இணைப்பு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் ஆதார் ஆவணங்களை இலவசமாகவே பொதுமக்கள் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆதார் மையங்களின் மூலமாக ஆதார் கார்டினை புதுப்பித்துப்பு செய்தால் ரூபாய் 50 சேவை கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைன் மூலமாகவே ஆதார் கார்டினை புதுப்பிப்பு செய்வது எப்படி?

  • முதலில் https://myaadhaar.uidai.gov.in/ என்கிற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று மை ஆதார் என்கிற பக்கத்தை தேர்வு செய்யவும்.
  • இதன் பின்னர், உங்களது ஆதாரை புதுப்பிக்கவும் என்பதை கிளிக் செய்து ஆன்லைனில் புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் என்பதனை தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் பின்னர், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைலில் எண்ணிற்கு ஓடிபி எண் அனுப்பப்படுகிறது.
  • அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்தவுடன் புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் தரவு என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  • அதில் உங்களுக்கு விருப்பப்பட்ட தகவலை அப்டேட் செய்த பின்னர் சேவ் செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
  • இதன் பின்னர், URN எண்ணை பயன்படுத்தி அப்டேட் செய்யப்பட்ட விவரங்களின் புதுப்பிப்பு நிலையை கண்காணித்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *