காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்தால் டைப் 2 வகை நீரிழிவு நோய் வரும் அபாயம் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி, வாரத்திற்கு 4 முறை காலை சிற்றுண்டியை தவிர்ப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வர 55 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
பலரும் உடல் எடையைக் குறைக்க காலை உணவை தவிர்ப்பது நல்லது என நினைக்கும் நிலையில், அது நீரிழிவு நோய் ஏற்பட காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே, காலையில் உணவு எடுத்து கொள்வது மிகவும் முக்கியம் என்றும், அதில், புரோட்டின், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சரிவிகித உணவை உண்ண வேண்டும் என நீரிழிவுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.