சென்னையில் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் நடத்தும் தீபாவளி விழாவில் ஏழைப் பள்ளிக்குழந்தைகளுக்கு உதவி செய்ததைக்கண்டு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நெகிழ்ந்துப்போய் வாழ்த்தினார்.

பத்திரிகைகளில் பணியாற்றும் புகைப்படக் கலைஞர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளை தங்கள் லென்ஸ் கண்களால் வெளிச்சம் போட்டு காட்டுவதை அனைவரும் அறிவர். பல செய்திகள் சொல்லாததை ஒரு புகைப்படம் மூலம் செய்தித்தாள்களில் பதிவு செய்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் புகைப்படக்கலைஞர்கள் ஆண்டுதோறும் சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியத்தை செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளி விழாவை சென்னையில் உள்ள வடசென்னை புளியந்தோப்பு டிகோஸ்டர் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது. இந்தப்பள்ளியில் உள்ள மாணவர்கள் பெரும்பாலோர் ஆதரவற்றவர்கள் அல்லது மிகவும் வறுமை நிலையில் உள்ள குழந்தைகள் படித்துவருகின்றனர். இவர்களுக்கு தீபாவளிக்கான உடைகள் மற்றும் உட்கார்ந்து படிக்க வண்ணமயமான சிறு பிளாஸ்டிக் நாற்காலிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *