பள்ளிகள் திறப்பு நடவடிக்கைகள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக முதல்வர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக அமலில் உள்ள நான்காம் கட்ட பொது முடக்கம் மே 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
நான்காம் கட்ட பொதுமுடக்கம் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் கள் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எப்படி நடத்துவது, அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்க உள்ளனர். மேலும் பள்ளிகள் திறப்பு எப்போது திறக்கலாம் என்பது குறித்தும் அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர்.