உலக டாக்டர்கள் தினம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டதை போல் சென்னையிலும் மிகச்சிறப்பாக டாக்டர்களால் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ரத்த பரிமாற்றத்துறை சார்பில் நேற்று மாணவர்கள் பங்கேற்ற ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த ரத்த முகாமை மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடமாடும் ரத்த வங்கி பேருந்தில் 300 மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று தங்களுடைய ரத்தத்தை தானமாக வழங்கினர். ரத்த தானம் வழங்கிய மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தானமாக பெறப்பட்ட ரத்தம் பல்வேறு நோய் தொற்று கண்டறிவதற்காக பரிசோதிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட உள்ளது. முன்னதாக கீழ்ப்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 45 டாக்டர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்றது.
இந்த முகாமினை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் டாக்டர் நாராயணபாபு, துணை முதல்வர் டாக்டர் பாரதி வித்ய ஜெயந்தி ஆகியோர் பார்வையிட்டனர்
English Summary:Doctors of the World Blood Donor Day, to mark the 300 students in Chennai .