பிளஸ் 2 முடித்துவிட்டு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி என்பது குறித்து ஒருசிலர் அறியாமல் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் கல்விக்கடன் பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் கலந்தாய்வுக்கு பின்னர் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு ஆணையை பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வங்கி அரங்கில் முதலில் கொடுக்க வேண்டும். அந்த ஆணையை பார்த்த பிறகு அரங்கில் உள்ள வங்கி பணியாளர்கள் கடனுக்கான ஒப்புதல் கடிதத்தை உடனே தருவார்கள். சில வங்கிகள் ஒதுக்கீட்டு ஆணை இல்லாமலேயே ஒப்புதல் கடிதம் வழங்குகின்றன.

வங்கி அதிகாரிகள் தரும் ஒப்புதல் கடிதத்தை எடுத்துக் கொண்டு வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுக வேண்டும்.

கல்விக் கடன் பெறுவதற்கு வங்கி கிளையில் அளிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1.அண்ணாப் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்படும் ஒதுக்கீட்டு ஆணை.

2. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வங்கி அரங்கில் கொடுக்கப்படும் ஒப்புதல் கடிதம்.

3. பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

4. வருமான சான்றிதழ்.

5. ஆதார் அட்டை அல்லது பான் அட்டை.

6. கல்லூரியிலிருந்து பெறப்படும் சேர்க்கை சான்றிதழ்.

7. கல்லூரியிலிருந்து வழங்கப்படும் கட்டண விவரம்.

8. அடையாளச் சான்று,

9. இருப்பிடச் சான்று.

இந்த ஆவணங்களை பரிசீலித்த பிறகு கல்விக் கடன் வழங்கப்படும். படிப்பு காலம் முடிந்து ஒரு வருடம் அல்லது வேலை கிடைத்த பிறகு 6 மாதங்கள்-எது குறுகிய காலமோ அந்த காலத்திலிருந்து கடனை திருப்பச் செலுத்த வேண்டும். படிக்கும் காலத்தில் கடனில் எந்த பகுதியையும் திரும்பச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் கடனுக்கான வட்டியை படிக்கும் காலத்திலேயே தவறாமல் கட்டி வருபவர்களுக்கு வட்டி விகிதத்தில் சலுகை தரப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அரங்குகள் அமைத்துள்ள வங்கிகளில், 4 லட்சத்துக்கு உட்பட்டு இருக்கும் கல்விக் கடனுக்கு கோரப்படும் வட்டி விகிதமும், வட்டியை படிக்கும் காலத்திலேயே கட்டுபவர்களுக்கு தரப்படும் சலுகை விகிதமும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது

வங்கிகளின் கல்விக்கடன் வட்டி விகிதம் குறித்து தற்போது பார்ப்போம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி: ஆண்கள் 12% பெண்கள் 11.5%
விஜயா வங்கி: ஆண்கள் 11.8% பெண்கள் 11.3%
தேனா வங்கி ஆண்கள் 11.55% பெண்கள்11.55%
யுனைடெட் வங்கி ஆண்கள் 13.25% பெண்கள் 12.75%
கனரா வங்கி ஆண்கள் 11.55 பெண்கள் 11%
இந்தியன் வங்கி ஆண்கள் 12.25% பெண்கள் 11.75%
சிண்டிகேட் வங்கி ஆண்கள் 11.5% பெண்கள் 11%

English Summary:What should be done to get the loan . A detailed view