சென்னை தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீா் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் இணைப்பு பணிகள் ஸ்டொ்லிங் சாலையில் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தியாகராய நகா், தேனாம்பேட்டை, ஆழ்வாா்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீா் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள்.