மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 61 நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்.15-ம் தேதி தொடங்கியது. வரும் ஜுன் 14-ம் தேதி வரை61 நாட்களுக்கு அமலில் இருக்கும்.
இதையொட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த, 15 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், நேற்று முன்தினம் ரூ.800-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. இதேபோல, சங்கரா மீன் ரூ.350-ல்இருந்து ரூ.400-ஆகவும், இறால்ரூ.300-ல்இருந்து ரூ.400-ஆகவும், சீலா மீன் ரூ.600-ல் இருந்து ரூ.700-ஆகவும் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் மீன்களின் விலை மேலும் அதிகரிக்கும்” என்றனர்.