சென்னை: ஓட்டுசாவடிக்கு கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அளித்து ஓட்டுப் போட அனுமதிக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 18ல் தேர்தல் நடக்கிறது. ஓட்டுப் போட யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அதில் ஆண்கள் பெண்கள் தனித்தனியாக வரிசையில் நின்று ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும். கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முதலில் ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் அட்டை இல்லாத யாரையும் ஓட்டுச்சாவடிக்குள் போட்டோ எடுக்க அனுமதிக்க கூடாது. ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர்கள் அந்த தொகுதியின் வேட்பாளர் வேட்பாளரின் தேர்தல் முகவர் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர்கள் தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்கள் மைக்ரோ அப்சர்வர் மட்டுமே இருக்கலாம்.
இசட் பிரிவு பாதுகாப்பு வசதி பெற்ற வாக்காளருடன் சாதாரண உடையணிந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் ஒருவர் வரலாம்.பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் கமிஷனால் போட்டோ எடுக்க மற்றும் வெப் கேமரா திட்டப்பணியாளர்கள் ஆகியோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.