சென்னை: வேலை வாய்ப்பு துறை வழியாக, தகுதியானவர்களை தனியார் நிறுவன வேலைக்கும் தேர்வு செய்யலாம் என தமிழக வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது. தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டசெய்திக் குறிப்பு: வேலையில்லா பட்டதாரிகள், டிப்ளமா முடித்தவர்கள் ஐ.டி.ஐ., முடித்தவர்கள் தனியார் நிறுவனங்கள் வழியாக வேலைவாய்ப்பு ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனரகம் மேற்கொள்கிறது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளி கிழமைகளில் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’ என்ற முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல், முதுநிலை பட்ட படிப்பை முடித்தவர்கள் வரை, பங்கேற்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை தர விரும்பும் நிறுவனங்கள் [email protected] என்ற இணையதளத்தில் தங்கள் விபரங்களை தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனரகத்துக்கு அனுப்பலாம். இந்த சேவைக்கு, எந்த கட்டணமும் கிடையாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *