சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரம் அருகேயுள்ள சேலையூரில் பாரத் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலையில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் ஜூன் 3ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள்து.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ செய்தியாளர்களிடம் கூறியபோது, “பாரத் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பொறியியல் இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் நாடெங்கும் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 53 ஆயிரம் பேர் பங்கேற்றனர். நுழைவுத் தேர்வு முடிவுகளுடன் தர வரிசைப்பட்டியலும் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. கலந்தாய்வில் தினமும் சுமார் 1000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கல்வியாண்டு முதல் கலை, அறிவியல், பட்டப் படிப்புகள் தொடங்கப்படவுள்ளதாகவும், பி.காம்., பி.எஸ்சி., பி.ஏ., பி.சி.ஏ., பி.பி.ஏ. ஆகிய பிரிவுகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளும் எம்.காம்., எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.ஏ. ஆகிய பிரிவுகளில் முதுநிலைப் பட்டப் படிப்புகளும் தொடங்கப்படவுள்ளதாகவும், மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார். மேலும் எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. பிரிவில் 3 ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப் படிப்புகளும் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Counselling for engineering students at Bharat University from June 3.