தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று காலை 11மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாஅண்டு விழா அரங்கில் பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுனர் ரோசய்யா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜெயலலிதாவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, மோகன், வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜூ, காமராஜ், தங்கமணி, செந்தில் பாலாஜி, சம்பத், வேலுமணி, சின்னாயா, கோகுல இந்திரா, சுந்தரராஜ், சண்முகநாதன், சுப்பிரமணியன், ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியன், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, ரமணா, வீரமணி, தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம், விஜய பாஸ்கர் ஆகியோர்கள் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், சிவக்குமார், கார்த்தி, அர்ஜுன் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பதவியேற்பு விழாவில் தமிழக பா.ஜனதா சார்பில் மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவில் மதுரை ஆதினம், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா, செய்தி வாசிப்பாளர்கள் பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, நடிகர் தியாகு, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் குயிலி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரும் வந்திருந்தனர்.

English Summary : Rajinikanth participated in Chief minister Jayalalitha inauguration ceremony .