வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற தொடர் ஹிட்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பிரபல குளிர்பான நிறுவனமான கோலா நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது,.

உலகம் முழுவதும் பிரபலமாக செயல்பட்டு வரும் குளிர்பான நிறுவனமான கோலா நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ஒன்றின் விளம்பர படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனை அணுகியதாகவும், அதற்காக அந்த நிறுவனம் சிவகார்த்திகேயக்கு ஒரு பெரிய தொகையை கொடுக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த விளம்பர படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு படம் நடித்தால் கிடைக்கும் பெரிய தொகை ஒருசில மணி நேரங்கள் மட்டுமே நடிக்கும் விளம்பர படத்தில் நடித்தால் கிடைத்து விடும் வாய்ப்பை சிவகார்த்திகேயன் மறுத்தது ஏன் என்று விசாரித்தபோது, சிவகார்த்திகேயனின் பெரும்பாலான ரசிகர்கள் குழந்தைகளாக இருப்பதாகவும், கோலா நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருகும் நிலையில் தன்னுடைய விளம்பரத்தால் தனது நடிப்பை ரசிக்கும் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் சிவகார்த்திகேயன் இந்த விளம்பர படத்தில் நடிக்க மறுத்ததாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.

பணத்திற்கு ஆசைப்படாமல் சிவகார்த்திகேயன் எடுத்துள்ள இந்த முடிவிற்கு ஃபேஸ்புக், டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Since Cola is not good for health Sivakarthikeyan refused to act in their advertisement.