ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா ஆகிய படங்களை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தற்போது மாறுபட்ட தோற்றத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘கெத்து’. இந்த படத்தில் உதயநிதியின் தந்தையாக சத்யராஜும், ஜோடியாக எமி ஜாக்சனும் நடிக்கின்றனர். மேலும் சந்தானம், தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய்யின் நெருங்கிய உறவினரான விக்ராந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் விஷாலின் பூஜை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கற்க கசடற, நெஞ்சத்தை கிள்ளாதே, கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, சட்டப்படி குற்றம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த விக்ராந்த், தற்போது வில்லனாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை காமெடி மற்றும் ரொமாண்டிக் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்த உதயநிதி முதன்முதலாக ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கும் புதிய முயற்சியை எடுத்துள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் எமி ஜாக்சன் இந்த படத்தில் ஒரு பிராமின் பெண்ணாக நடிக்கின்றாராம். படம் முழுக்க மடிசார் சேலை கட்டி வித்தியாசமான ரோலில் அவர் நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

English Summary : In Udayanidhi’s film “Gethu”, Vikrath plays villan role.