இன்று உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் பிரபல கார் நிறுவனமான போர்டு நிறுவனம் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சென்னை போர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எதிர்கால தலைமுறைகளுக்கு தூய்மையான சூழலை வழங்க சென்னை மற்றும் சனானந்த் ஆகிய இடங்களில் செயல்படும் போர்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டிலிருந்து வளங்களை அளவுடன், மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகிறது. இதற்காக கார்களின் எரியாற்றல் பயன்பாட்டை 16 சதவீதமும், நீர் பயன்பாட்டின் அளவை 30 சதவீதமும் குறைத்துள்ளது. நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் முழுமையாக சுத்தகரிக்கப்பட்டு, மறுசுழற்சியில் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கா வகையில், அதிக புகைவெளியிடா இகோபூஸ்ட் எஞ்சினை தயாரித்து கடந்த 2012ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 3 முறை சர்வதேச எஞ்சின் விருது பெற்றுள்ளது. கார்பரேட் பொறுப்புணர்வை மதித்து, சென்னை நிறுவனத்தை சுற்றி சுற்றுச்சூழல் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

போர்ட் நிறுவனத்திற்கு அருகில் உள்ள 70 கிராமங்களில் உள்ள தொடக்கபள்ளிகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பிரச்னைகள் அடையாளம் கண்டு அதை தீர்க்கும் முயற்சியில் போர்டு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Ford company plays a important role in protecting the environment Archives in Chennai.