‘உத்தம வில்லன்’ படத்தை கமல்ஹாசன் நடித்த பாபநாசம்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் கமல்ஹாசன் தற்போது ‘தூங்காவனம்’ என்ற த்ரில் படத்தில் பிசியாக உள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற அரசியல் மற்றும் அண்டர்கிரவுண்ட் கதை ஒன்றை தயார் செய்து அதை தயாரிக்க முடிவு செய்திருந்தார். ஆனால் திடீரென அந்த படம் கைவிடப்பட்டது. தற்போது இந்த படத்தை அவர் இந்தியில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மல்டி ஸ்டார் கதையான இந்த படத்தில் சயீப் அலிகான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் கமல்ஹாசன் முதல்முறையாக இன்னொரு ஹீரோ நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அமெர் ஹெய்ன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் அமெரிக்க நாட்டின் ‘தி அன்டச்சபிள்ஸ்’ என்ற படத்திற்கு இணையான த்ரில்லர் படமாக இருக்கும் என்றும் கமல் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

கமல் தற்போது நடித்து வரும் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.

English Summary : After Thungavanam project Kamal Haasan decides to play a negative role in the next film.