அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் கொல்கத்தாவில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவுக்கு படக்குழுவினர் அனைவரையும் அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்துவதால் அதிக செலவாகும் என கருதிய தயாரிப்பு தரப்பு கொல்கத்தாவுக்கு பதில் ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்துமாறு கூறியதாக தெரிகிறது.

ஆனால் ஆந்திராவில் சமீபத்தில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் காரணமாக அங்கு படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என அஜீத் கூறிய அறிவுரையால் அந்த திட்டம் கைவிடப்பட்டு, கொல்கத்தாவிலேயே படப்பிடிப்பை தொடர படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வரும் நிலையில் சூரி, மயில்சாமி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ‘ஆதித்யா டி.வி.’ தாப்பா என ஒரு பெரிய காமெடி கூட்டமே இப்படத்தில் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : 20 Tamil people killed is the reason Ajith excluded shooting in Andra.