போலீஸ் ஸ்டோரி, தி மித், ரஷ் ஹவர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்த பிரபல நடிகர் ஜாக்கிசான் மரணம் அடைந்துவிட்டதாக வெளிவந்த வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் நலமுடன் இருப்பதாகவும், வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் ஜாக்கி சான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் ஜாக்கிசான் மரணம் அடைந்துவிட்டார் என பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டதோடு, அந்த செய்தியை தொலைகாட்சி வாசிப்பாளர் ஒருவர் வாசிப்பது போல ஃபோட்டோஷாப் படம் ஒன்றையும் வெளியிட்டது. இந்த தகவல் சிலமணி நேரங்களில் மற்ற இணையதளங்களிலும், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் காட்டுத்தீ போன்று பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஜாக்கிசான் தனது அதிகாரர்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நான் விமானத்திலிருந்து இறங்கியதும் எனக்கு இந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. கவலைப்படவேண்டாம். நான் நலமுடன் உயிரோடுதான் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஜாக்கிசான் தற்போது 68-வது கேன்ஸ் சர்வதே திரைப்பட விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: False rumor were spread that Jackie Chan was dead in Social Websites and in Some News Channels.