மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளிவந்த மலையாள திரைப்படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல். இந்த திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அந்த படத்தை ரீமேக் செய்து அதில் மம்முட்டி நடித்த கேரக்டரில் நடிக்க விரும்பியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ப்ரெண்ட்ஸ், காவலன் ஆகிய விஜய் நடித்த படங்களை இயக்கிய சித்திக் இயக்கியிருந்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை எஸ்.எஸ்.துரைராஜ் என்பவர் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் ரஜினி தரப்பினர் தமிழ் ரீமேக் உரிமையை தங்களிடம் விற்கும்படி கேட்டதாகவும், ஆனால் துரைராஜ் அந்த படத்தின் உரிமையை விற்க விரும்பவில்லை என்றும், ரஜினி விரும்பினால் அந்த படத்தை ரஜினி நடிப்பில் நானே தயாரிக்க தயாராக உள்ளதாகவும் கூறியதாக தெரிகிறது.

ஆனால் லிங்கா பிரச்சனைக்கு பின்னர் தயாரிப்பாளர்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கும் ரஜினி, இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின்னர் தான் ரஜினி, தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

English Summary: Rajini Likes to act in Mammooty’s Film “Baskar the Raskal”.