உலக தமிழ் சங்கம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்றது. சென்னை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழாவில், உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்விதுறை அமைச்சர் வீரமணி முன்னிலை வகித்தார். மேலும் தமிழ் வளர்ச்சிதுறை செயலாளர் ராஜாராம், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த அறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

சென்னையில் இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், திருக்குறள் குறித்து பல்வேறு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் பழனியப்பன் ‘திருக்குறளை மையப்படுத்தி நடைபெறும் முதல் பன்னாட்டு மாநாடு இதுவாகும். திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்களே இல்லை. உலகில் எந்நாட்டவருக்கும், எந்நேரமும் பயன்படும் கருத்துக்களை கொண்டது திருக்குறள். இத்தகை சிறப்புமிக்க திருக்குறள், 100க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிெபயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், சீனம் மற்றும் அரபு மொழியில் குறளை மொழி பெயர்கள் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்’’ என்று கூறினார்.

English Summary: International Thirukkural Conference started in Chennai Today.