‘தலைவாசல்’ படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் காதல் கோட்டை, தேவர் மகன் உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர் தலைவாசல் விஜய் தற்போது ‘அபூர்வ மகான்’ என்ற படத்தில் சாய்பாபாவாக நடித்து வருகிறார். சாய்முரளி, ரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், வினுசக்கரவர்த்தி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

சாய்பாபாவின் அபூர்வ செயல்கள் மற்றும் அவருடைய வாழ்க்கையை குறித்து இந்த படத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளதாகவும், இந்த படம் சாய்பாபா பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும் இயக்குனர் கே.ஆர்.மணிமுத்து கூறியுள்ளார்..

படத்தை பார்க்கிற யாருமே உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியாது என்றும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு கதாப்பாத்திரத்தில் வினு சக்கரவர்த்தியை நடிக்க வைத்ததாகவும், உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையில் இருந்த அவர் சாய்பாபாவின் அருளால் உடல்நிலை குணமாகி இந்த படத்தில் நடித்ததாகவும் இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக வினுசக்கரவர்த்தி பணம் எதுவும் வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டி.என்.எஸ்.செல்லத்துரை தேவர், கே.பி.செல்வம் தயாரிக்கிறார்கள்.

English summary: Film telling about the beliefs and Truth of Sai Baba named “Apoorva Mahan”.